சென்னை: திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்கள் துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இன்று நடக்க உள்ளது.காலை, 10:30 மணிதமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய, ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இம்மாவட்டங்களை, முதல்வர் இ.பி.எஸ்., அந்தந்த இடங்களுக்குச் சென்று, துவக்கி வைத்து வருகிறார்.
தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் துவக்க விழா, நிறைவடைந்த நிலையில், இன்று திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களின் துவக்க விழா நடக்க உள்ளது. திருப்பத்துார் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், இன்று காலை, 10:30 மணிக்கு, திருப்பத்துார் மாவட்ட துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்க உள்ளது.அடிக்கல்இன்று மதியம், 12:30 மணிக்கு, ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில், ராணிப்பேட்டை மாவட்ட துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்க உள்ளது.
இரு விழாக்களிலும், முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்று, புதிய மாவட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அத்துடன், முடிந்த திட்டப் பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்ட உள்ளார்.விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பங்கேற்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட துவக்க விழா, நாளை நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE