உத்தவ் தாக்கரேக்கு ஸ்டாலின் வாழ்த்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உத்தவ் தாக்கரேக்கு ஸ்டாலின் வாழ்த்து

Updated : நவ 28, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (50)
Share
 உத்தவ் தாக்கரேக்கு, ஸ்டாலின், வாழ்த்து

சென்னை :மஹாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்க உள்ள, உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தொலைபேசி யில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.உத்தவ் தாக்கரேவிடம், ஸ்டாலின் தொலைபேசியில் பேசியதாவது:உங்களுக்கு, தி.மு.க., சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். மாநில கட்சியின் தலைவர் ஒருவர், முதல்வராவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

தடைகளை எல்லாம் உடைத்து, வெற்றி பெற்றுள்ளீர்கள். தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவீர்கள் என, நம்புகிறேன்.

சரத்பவாரிடம், ஸ்டாலின் தொலைபேசியில் பேசியதாவது:மஹாராஷ்டிரா மாநிலத்தில், நிலையான ஆட்சியை அமைத்ததற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். எதிர்கட்சியினரின் ஒற்றுமைக்கு, அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். ஜனநாயகம் துடிப்பாக இயங்கவும், அரசியலமைப்புச் சட்டமும், நாடும் வலிமையாக இருக்கவும், இந்த ஒற்றுமை தொடர வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசியதாக, தி.மு.க., தலைமை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


முதல்வரிடம் நலம் விசாரிப்பு

* புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மூட்டு வலியால், சென்னை, வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில், இம்மாதம், 25ம்தேதி அனுமதிக்கப் பட்டார். அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

மருத்துவமனையில் தங்கியுள்ள முதல்வர் நாராயணசாமியை, நேற்று ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, நேரு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தனர்

* சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், கரூர் மாவட்டம், தாந்தோணி மேற்கு ஒன்றிய ஜெ., பேரவை துணைத் தலைவர், ஏ.கண்ணையன் தலைமையில், அ.தி.மு.க., நிர்வாகிகள், 200 பேர், நேற்று, தி.மு.க., வில் இணைந்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X