சென்னை :''சந்திராயன் - 3 திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,'' என, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவன் கூறினார்.பெங்களூரு செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:இதுவரை, 'இஸ்ரோ' தயாரித்த செயற்கைக் கோள்களிலேயே, 'கார்டோ சாட் - 3' செயற்கைக்கோள் அதிநவீனமானது.
முற்றிலும், இந்திய தொழில்நுட்பத்தில் உருவானது. தற்போது ஏவப்பட்டுள்ள, 'கார்டோசாட் 3' மற்றும், 13 சிறிய செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன.'சந்திராயன் - 3' திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னும் ராக்கெட்டை ஏவுவதற்கான தேதி முடிவாகவில்லை. சூரியனை ஆராய ஏவப்படவுள்ள, 'ஆதித்யா - எல் 1' மற்றும், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டங்கள் நடந்து வருகின்றன.இவ்வாறு, சிவன் கூறினார்.***'சந்திரயான் - 3 பணிகள் தீவிரம்'''சந்திரயான் - 3 திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,'' என, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவன் கூறினார்.பெங்களூரு செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:இதுவரை, 'இஸ்ரோ' தயாரித்த செயற்கைக் கோள்களிலேயே, 'கார்டோசாட் - 3' செயற்கைக்கோள் அதிநவீனமானது. முற்றிலும், இந்திய தொழில்நுட்பத்தில் உருவானது. தற்போது ஏவப்பட்டுள்ள, 'கார்டோசாட் - 3' மற்றும், 13 சிறிய செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன.
'சந்திரயான் - 3' திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னும் ராக்கெட்டை ஏவுவதற்கான தேதி முடிவாகவில்லை. சூரியனை ஆராய ஏவப்படவுள்ள, 'ஆதித்யா - எல் 1' மற்றும்மனிதனை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டங்கள் நடந்து வருகின்றன.இவ்வாறு, சிவன் கூறினார்.