பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் பார்வையாளர் நியமனம்?

Added : நவ 27, 2019
Advertisement

சென்னை : உள்ளாட்சி தேர்தலில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, தேர்தல் பார்வையாளர்களாக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.தமிழகத்தில், காலியாக வுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு, தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு, அதன் அறிக்கையை, டிச., 13ல் தாக்கல் செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

இதனால், தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.தேர்தல் குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதியில் அல்லது டிச., முதல் வாரத்தில் வெளியாகும் என, கூறப்படுகிறது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை அமைதி யான முறையில் நடத்துவதற்காக, லோக்சபா, சட்டசபை தேர்தலை போன்று, தற்போது பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க, ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட உள்ளார். இதற்காக, அதிகாரிகளை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.இப்பணியில் ஈடுபடுவதற்கு, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. இதனால், பல்வேறு துறைகளில் பணிபுரியும், இளைய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, பார்வையாளர்களாக நியமிக்க, ஆணையம் முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X