சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தன் டுவிட்டர் பதிவில்கூறியிருப்பதாவது: பி.எஸ்.எல்.வி.சி., - 47 ஏவுகலன் வாயிலாக, இந்தியாவின், 'கார்ட்டோசாட் - 3' செயற்கைக் கோள் மற்றும், அமெரிக்காவின், 13 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக, விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். மேலும், சாதனை படைக்க வாழ்த்துக்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Advertisement