பொது செய்தி

தமிழ்நாடு

குணச்சித்திர நடிகர் பாலா சிங் மரணம்

Added : நவ 27, 2019
Advertisement
 குணச்சித்திர நடிகர் பாலா சிங் மரணம்

சென்னை, குணச்சித்திர நடிகர் பாலாசிங், 67, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
சென்னை, விருகம்பாக்கத்தில் வசித்தவர் பாலாசிங். நாடக கலைஞர். பல்வேறு திரைப்படங்களில், குணச்சந்திர வேடங்களில் நடித்து வந்தார். கல்லுாரியில் படித்தபோது, தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து, முறையாக நடிப்பு பயின்றார். மேடை நாடகங்களில் நடிக்க, அதிக ஆர்வம் காட்டிய இவர், மலையாள படம் வாயிலாக, சினிமாவுக்கு அறிமுகமானார்.
இருப்பினும், தமிழ் சினிமாவில், அவதாரம் படம் தான், இவரை பிரபலப்படுத்தியது.தீனா, புதுப்பேட்டை உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திடீர் உடல் நலக்குறைவால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், இறந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இவரது உடல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, அவரது சொந்த ஊரான களியாக்காவிளையில், அடக்கம் செய்யப்படுகிறது. பாலாசிங்கிற்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X