அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அரசு நிதியை வீணாக்காதீர்கள்' என அமைச்சர் அறிவுரை

Added : நவ 27, 2019
Advertisement


சென்னை, ''பள்ளி உங்கள் வீடு; மாணவர்கள் உங்கள் பிள்ளைகள் என நினைத்து செயல்படுங்கள். அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை சரியாக பராமரிக்காமல், அரசு நிதியை வீணாக்காதீர்கள்,'' என, பள்ளி கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கும் புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு அரங்கில், நேற்று நடந்தது. புத்தகத்தை வெளியிட்டு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஐந்து மாணவர்கள் கூட இல்லாத பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள் பாடம் சொல்லி தருகின்றனர். அவர்களின் சம்பளத்துக்கு மட்டும், ஆண்டுக்கு, 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்யும்போது, மாணவர்களை கூடுதலாக சேர்க்க, ஆசிரியர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? கிராமப்புற மாணவர்களுக்கும், கட்டணமில்லாத, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, நலத்திட்டங்களை செய்கிறது. பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது; கம்ப்யூட்டர் வாங்கப்படுகிறது; 'ஸ்மார்ட்' வகுப்பு நடத்தப்படுகிறது; சீருடை, புத்தகம் என, 14 வகை இலவசங்கள் வழங்கப்படுகின்றன; பல கோடி ரூபாய் செலவிட்டு, ஆசிரியர்களை அரசு பணியமர்த்துகிறது. அலட்சியம் வேண்டாம்!அரசின் நல்ல எண்ணங்களையும், திட்டங்களையும், அதிகாரிகளும், ஆசிரியர்களும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பல இடங்களில், ஸ்மார்ட் வகுப்புக்கு சரியான வகுப்பறையும், இணையதள வசதியும் ஏற்பாடு செய்யப் படவில்லை. எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவங்க, அதிகாரிகளின் முயற்சிக்க வேண்டும். பயன்படாத பழைய பாட புத்தகங்கள் பள்ளி களில் தேங்கி கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தாமல், ஆசிரியர்கள் அலட்சியமாக உள்ளனர். இந்த நிலை இருக்க கூடாது. அவற்றை, விதிகளை பின்பற்றி, தமிழக காகித தொழில் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். வீணாக்காதீங்கள்!நாற்காலிகள், மேஜை, பெஞ்ச் போன்றவற்றில், ஒரு காலில் சிறிய சேதமாகி இருந்தாலும், அவற்றை பழுது பார்க்காமல், ஓட்டை, உடைசல் என்று கூறி, ஓர் இடத்தில் குவித்து வைக்கும் நிலை உள்ளது. நம் வீட்டில் அப்படி இருந்தால் விட்டு விடுவோமா? அவற்றை பழுது பார்த்து பயன்படுத்தலாம்.

இவ்வாறு செய்தாலே, அரசுக்கு, ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவு குறையும்.பழைய கட்டடம்பள்ளி வளாகங்களில் பயன்படுத்த முடியாத கட்டடங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக இடித்து, அப்புறப்படுத்த வேண்டும். இடிந்த நிலையில் கட்டடத்தை வைத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சிதிலமான கட்டடங்களை இடித்தால், அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டலாம். அதற்கு, சமூக அமைப்புகள், முக்கிய பிரமுகர்களிடம் உதவி பெறுங்கள்.கல்விக்காக அரசு செலவிடும் நிதியை, தயவு செய்து வீணாக்காதீர்கள். பள்ளிகளை உங்கள் வீடு போன்றும், மாணவர்களை உங்கள் பிள்ளைகள் போன்றும் நினைத்து செயலாற்றுங்கள்.பள்ளி கல்வி செயலரும், பள்ளி கல்வி கமிஷனரும், விரைவில் கிராமங்கள்தோறும், பள்ளிகளை ஆய்வு செய்ய வர உள்ளனர். அப்போது, சரியாக நிர்வகிக்காத பள்ளிகளின் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளின் பட்டியல் தயாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X