பொது செய்தி

தமிழ்நாடு

வட கிழக்கு மழை மீண்டும் தீவிரம்

Added : நவ 27, 2019
Advertisement

சென்னை -வடகிழக்கு பருவ மழை, மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. இன்று முதல், ஒரு வாரத்துக்கு, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, இரண்டு வாரங்களுக்கு மேலாக, வலுவிழந்து காணப்பட்டது. அரபி கடலில், இரண்டு புயல்களும், வங்க கடலில், ஒரு புயலும் உருவானதால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழை, மற்ற மாநிலங்களுக்கு சென்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், கோடை காலத் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, வடகிழக்கு பருவ மழையே பேருதவி செய்யும். அதனால், வட மாவட்டங்களுக்கு, இந்த ஆண்டு வழக்கமாக கிடைக்க வேண்டிய மழை பெய்யுமா என, பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், வட கிழக்கு பருவ மழை, மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில், மிதமான மழை துவங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, கடலுாரில், 6 செ.மீ., மழை பதிவானது.

புதுச்சேரியில், 4; கேளம்பாக்கத்தில், 3; உத்திரமேரூர், காஞ்சிபுரத்தில், 2 செ.மீ., மழை பதிவானது. வரும், டிச., 1 வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக, கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், கன மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. தனியார் வானிலை ஆய்வுகள் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செயற்கைகோள் படங்களின் படி, இன்னும் ஒரு வாரத்துக்கு, தமிழக கடலோர மாவட்டங்களில், மிதமானது முதல் கன மழை பெய்வதற்கு, சாதகமான சூழல்கள் உருவாகியுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலுார், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட, கடலோர மாவட்டங்களிலும், பிற உள்மாவட்டங்களிலும், மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னையில், இன்று முதல் படிப்படியாக மழை அதிகரித்து, நாளை முதல், இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், வரும், 30ம் தேதி முதல், இரண்டு நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X