சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

முன் மாதிரியாக திகழ்கிறார் ரஞ்சன் கோகோய்!

Updated : நவ 28, 2019 | Added : நவ 27, 2019
Share
Advertisement
தி.மங்களம், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:டில்லியில் உள்ள அரசு இல்லங்களில் தங்கும் அரசியல்வாதிகள், தேர்தல்களில் தோற்று, தங்கள் பதவி பறி போன பின்னரும், காலி செய்ய மறுக்கின்றனர்; அங்கு, தங்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களை காலி செய்ய வைக்க, மத்தியில் ஆட்சியில் இருப்போர், படாத பாடு படுகின்றனர்.புதிதாக

தி.மங்களம், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
டில்லியில் உள்ள அரசு இல்லங்களில் தங்கும் அரசியல்வாதிகள், தேர்தல்களில் தோற்று, தங்கள் பதவி பறி போன பின்னரும், காலி செய்ய மறுக்கின்றனர்; அங்கு, தங்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களை காலி செய்ய வைக்க, மத்தியில் ஆட்சியில் இருப்போர், படாத பாடு படுகின்றனர்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு வீடுகளை ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.இத்தருணத்தில், அரசியல்வாதிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.இவர், பல்லாண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த அயோத்தி வழக்கிலும், ஆர்.டி.ஐ., வழக்கிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியவர். பதவியில் இருந்தபோது மட்டுமல்லாது, ஓய்வு பெற்ற நிலையிலும், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்பவர்.அவர், 2019, நவ., 17ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். டில்லியில், வி.வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் பகுதியில் அவருக்கு, அரசு இல்லம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் இருந்தபடி தான், தன் அலுவல்களை கவனித்து வந்தார். ஓய்வு பெற்ற மூன்றே நாட்களில், அவர் வசித்த அரசு இல்லத்தை காலி செய்து விட்டார்.ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஒரு மாதம் வரை கூட அரசு இல்லத்தில் தங்க அனுமதி உண்டு. ஆனாலும், அவர் மூன்றே நாட்களில் இல்லத்தை காலி செய்ததன் வாயிலாக, அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அதன் மூலம் அனைவரின் பாராட்டும் பெற்றுள்ளார்.ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியை பார்த்தாவது, அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். தனக்கு உரிமையில்லாதவற்றை அனுபவிக்க நினைப்பது, திருட்டுக்கு சமம் தானே... அதை ஏன், அரசியல்வாதிகள் எண்ணிப் பார்க்க மறுக்கின்றனர்.

காப்பீட்டு திட்டநடைமுறைகளைஎளிமைப்படுத்தணும்!

பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
பிரதமரின் காப்பீட்டு திட்டம் வாயிலாக, மருத்துவ சிகிச்சை பெற தகுதியுடையோரில், 90சதவீதம் பேர் மட்டுமே பயன் பெறுகின்றனர். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே அடிப்படையாக்கி செயல்படுவதால், அவற்றிடம், சேவையை எதிர்பார்க்க முடியாது.இத்தருணத்தில், 'புதிய இந்தியாவுக்கான சுகாதார அமைப்பு, சீர்திருத்தத்துக்கான வழிமுறைகள்' என்ற தலைப்பிலான, 'நிடி ஆயோக்' அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், பல உண்மைகள் வெளியாகி உள்ளன.மத்திய, மாநில அரசுகள், இந்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து, அதற்கேற்ப சுகாதாரத் துறையில், புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டியது இன்றைய கால கட்டத்தின் அவசர அவசிய தேவை.நாட்டில் மருத்துவத்துக்கான மொத்த செலவு,2015ல், 49.8 லட்சம் கோடி ரூபாய். இதில், மக்களால் செலவிடப்பட்டது, 315 லட்சம் கோடி ரூபாய். மருத்துவத்துக்காக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்பதை, இந்த அறிக்கை, மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தி உள்ளது.இன்று, அமலில் உள்ள சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, போதிய கண்காணிப்பு நடவடிக்கைகள், அரசுகளால் மேற்கொள்ளப்படுவதில்லை; இந்த கசப்பான உண்மையையும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார திட்ட விதிமுறைகள், பயனாளிகளுக்கு பெரும் தடையாக உள்ளன.நாட்டில் நடக்கும், மருத்துவ சிகிச்சைகளில், மக்கள் ௮௦ சதவீத பேர், தனியார் மருத்துவமனைகளை மேற்கொள்கின்றனர். இதை, 'நிடி ஆயோக்' சுட்டிக்காட்டி, 'மருத்துவ செலவிற்காக மக்கள் செலவிடுவது, நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ செலவில்,20 முதல் 30 சதவீதத்துக்கு அதிகமாக கூடாது' என, தெரிவித்துள்ளது.'நிடி ஆயோக்' தெரிவித்துள்ள யோசனைகளை கவனத்தில் எடுத்து, சுகாதார திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை, மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். திட்டங்களின் அமலாக்கம் குறித்து, உரிய கண்காணிப்பு அவசியம்.அரசின் காப்பீட்டு திட்டங்களை, மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், அதன் நடைமுறைகள், மேலும் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

கூட்டணி கட்சிகளைசமாளிக்க எடுத்தமிக அவசர சட்டமா!

சு.பிரபாகர், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
'மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் நடத்தி, மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கலாம்' என, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது; இது, சற்று யோசிக்கும் படியாக உள்ளது.உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல், பல்வேறு சாக்கு போக்குகளை, பல ஆண்டுகள் கூறி, அ.தி.மு.க., அரசு, இப்போது நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. திடீரென, இப்படி அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.இதற்கு, 'மேயர் ஒரு கட்சியை சேர்ந்தவராக இருந்து, பிற உறுப்பினர்கள் அனைவரும், வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில், முழு ஒத்துழைப்பு கிடைக்காது' என, தமிழக அரசு சார்பில் கூறப்படும் காரணம்.தமிழகத்தில், 15 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 500க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளும் உள்ளன. இவற்றிற்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில், ஏகப்பட்ட முரண்பாடு வரலாம். எனவே, மக்கள் நலப்பணிகள் பாதிக்கப் படலாம் என, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.எட்டு ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியே நடக்கும் போது கூட, மக்கள் நலப்பணிகள் விரைந்து செயல்படவில்லையே!ஒரே கட்சியைச் சார்ந்தவர்களே ஆட்சியில் இருக்கின்றனர். தட்டிக்கேட்க, இனி யாரும் இல்லை என்ற தைரியத்தில், ஆட்சியாளர்கள் நடந்து கொள்கின்றனரா... தி.மு.க., முன், ஒருமுறை, மறைமுகமாக மேயர், நகராட்சி தலைவர் தேர்வு செய்தது போல், அ.தி.மு.க.,வினரும் செய்யலாமா?ஓட்டு போடும்போது மட்டும் தான், அரசியல்வாதிகள் மக்களை பார்த்து கொஞ்சமாவது பயப்படுவர். அந்த ஓட்டு எனும் அஸ்திரம் பொதுமக்களிடமிருந்து பிடுங்கப்பட்டால் கதி என்னவாகும்.மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்படுவதாக, 'தினமலர்' நாளிதழ் எச்சரிக்கை மணி அடித்தது.இது, மொத்தத்தில், பிற்போக்கு சிந்தனையாகவும், கூட்டணி கட்சிகளை சமாளிக்கவும் எடுத்த, மிக அவசர சட்டமாக தெரிகிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X