சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 27, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம், அனைவரும் அறிந்தது தான். வெங்காயம் அதிகம் விளையும் மஹாராஷ்டிரா மற்றும் சில வட மாநிலங்களில் பெய்த, பருவம் தவறிய மழை தான், விளைச்சல் குறைவுக்கும், விலை உயர்வுக்கும் காரணம். எனவே, பிற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: ஒவ்வொரு ஆண்டும், இரு முறை வெங்காயம் விலை உயர்கிறது. இது தொடர்பாக நீங்கள், அவ்வப்போது விரிவாக ஆலோசனை வழங்கி, அறிக்கை வெளியிட்டாலும், அரசு தரப்பில் அதை சரியாக படித்து, புரிந்து, நடவடிக்கை எடுப்பதில்லை. இதன் மூலம், உங்கள் அறிக்கையை, அரசு தரப்பினர் கண்டு கொள்ளவில்லை என்பது மட்டும், 'டவுட்' இல்லாமல் புரிகிறது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: மாநிலங்களில் இருந்து, மத்திய தொகுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும், மருத்துவ கல்வி இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம். பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா... தமிழக, எம்.பி.,க்களே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்... உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?
'டவுட்' தனபாலு: இப்படி எல்லாம் பேசி, பிறருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் குளிர் காய நினைக்கும் உங்களைப் போன்றவர்களை, நம் தமிழக, எம்.பி.,க்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான், அவர்கள் அமைதியாக உள்ளனர் என்பது, உங்களுக்கு புரியவில்லையோ என்பதே என், 'டவுட்!

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, இந்த ஆண்டும், ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும். அத்துடன், தலா, 1 கிலோ அரிசி, சர்க்கரை, மற்றும் கரும்பு துண்டு வழங்கப்படும்.
'டவுட்' தனபாலு: இலவசங்கள் வழங்கி, மக்களை சோம்பேறி ஆக்கக் கூடாது என்ற கருத்து, இப்போதைய அரசியல் சூழ்நிலையில் எடுபடாது. மேலும், கடந்த ஆண்டு வழங்கி, இந்த ஆண்டு வழங்காமல் விட்டால், 'தமிழக அரசு நஷ்டத்தில் உள்ளது; அதனால் தான், பொங்கல் பரிசு கூட வழங்கவில்லை' என, தி.மு.க., பிரசாரம் செய்து விடும் என, பயந்து தான், இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்து விட்டீர்கள் என்பது, 'டவுட்'டே இல்லாமல் விளங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
28-நவ-201920:20:48 IST Report Abuse
karutthu திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: மாநிலங்களில் இருந்து, மத்திய தொகுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும், மருத்துவ கல்வி இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம். பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா... தமிழக, எம்.பி.,க்களே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்... உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?'டவுட்' தனபாலு: இப்படி எல்லாம் பேசி, பிறருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் குளிர் காய நினைக்கும் உங்களைப் போன்றவர்களை, நம் தமிழக, எம்.பி.,க்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான், அவர்கள் அமைதியாக உள்ளனர் என்பது, உங்களுக்கு புரியவில்லையோ என்பதே என், 'டவுட் டவுட் தனபாலின் இந்த பதிலே கீ வீரமணிக்கு சவுக்கடி கொடுத்தது போல் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
28-நவ-201919:43:53 IST Report Abuse
S.V.SRINIVASAN தமிழக எம் பிக்கள் அனைவரும் நீங்கள் அருவருடியாக இருக்கிற தி மு க ஆளுங்கதானே. அவங்க கிட்டேயே நேரடியா கேட்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
28-நவ-201914:13:29 IST Report Abuse
Harinathan Krishnanandam மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார அரசு மருத்துவ மனைகளையும் அரசு மருத்துவ கல்லூரி ஆகிவிடலாம் இதன் மூலம் மாணவர்கள் வெளியூர் சென்று செலவு செய்து படிக்க வேண்டிய தேவை முற்றிலும் தவிர்க்கப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X