பிரசார மேடையில் கண்ணீர் விட்டு கதறிய குமாரசாமி

Updated : நவ 27, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (44)
Advertisement
தேர்தல் பிரசார மேடையில் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுதார்

பெங்களூர்: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கு சமீபத்தில் அரசியலில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் குமாரசாமி தனது மகன் நிகில் கவுடாவை முதல் முறையாக போட்டியிட களமிறக்கினார். தனது சமூகத்தினர் ஓட்டு வங்கி பெருமளவில் இருக்க கூடிய மண்டியா லோக்சபா தொகுதியில் மகனை நிறுத்தினால் வெற்றி பெறுவார் என கணக்குப் போட்டார். ஆனால் எதிர்த்து போட்டியிட்ட நடிகை சுமலதாவிடம், நிகில் கவுடா தோல்வியுற்றார்.




இந் நிலையில் கர்நாடகாவில் டிச. 5ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாண்டியா மாவட்டத்தில் கே.ஆர்.பேட் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து குமாரசாமி பேசியது, ஆட்சி அதிகாரம் போய்விட்டது என்பதற்காக நான் கவலைப்படவில்லை. நீங்கள் வலியுறுத்தியதால் தான் 2019 லோக்சபா தேர்தல் எனது மகனை போட்டியிட வைத்தேன். எனது மகன் தோற்றதை நினைத்து நான் வருத்தப்படவில்லை. மண்டியா மக்களாகிய நீங்களே கைவிட்டுவிட்டீர்களே. அது தான் எனக்கு வருத்தமளிக்கிறது என்றார். அப்போது கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. உடனே கையில் வைத்திருந்த துண்டை எடுத்து, கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
02-டிச-201913:00:27 IST Report Abuse
sankar கவுத்துருவாங்க என்று தெரிந்தே கூட்டு வச்ச - நல்ல தெரிஞ்சுக்க - என்ஜின்தான் பெட்டியை இழுக்கும்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
30-நவ-201920:28:07 IST Report Abuse
Sampath Kumar நல்ல ட்ராமா இதை எங்க ஊரு காரங்க பார்த்தால் நல்ல படம் எடுப்பாங்க
Rate this:
Share this comment
Cancel
rajprince - dammam,சவுதி அரேபியா
28-நவ-201920:58:21 IST Report Abuse
rajprince வலியுறுத்தியது யார் மக்கலா அல்லது அவரின் மனைவியா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X