சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தனிப்பிரிவு ஏட்டு நடத்தும் தடாலடி வசூல்!

Added : நவ 27, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 தனிப்பிரிவு ஏட்டு நடத்தும் தடாலடி வசூல்!

''முதல்வரை கண் கலங்க வச்சுட்டாரு வே...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''அட... யாருங்க அது...'' என, வியப்புடன் கேட்டார், அந்தோணிசாமி.''அ.தி.மு.க., பொதுக்குழு, சமீபத்துல, சென்னை, வானகரத்துல நடந்துச்சுல்லா... இதுல, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுறப்ப, 'இதே மண்டபத்துல, பல முறை, ஜெயலலிதா பொதுக்குழுவை நடத்தியிருக்காங்க... இங்க கம்பீரமா உட்கார்ந்து, பல ஆலோசனைகளைச் சொல்வாங்க... ஜெயலலிதா ஆன்மா, நம்ம கூடத்தான் இருக்கு... அதுதான் நம்மை வழிநடத்துது'ன்னு உருக்கமா பேசினாரு வே...''இதைக் கேட்டு, முதல்வர் இ.பி.எஸ்., கண்ணுல கண்ணீர் கசிஞ்சிட்டு... 'டக்'குன்னு அவர் சமாளிச்சுக்கிட்டாலும், பெரிய திரையில, இதைப் பார்த்த பொதுக்குழு உறுப்பினர்களும் சோகமாகிட்டாங்க வே...'' என்றார், அண்ணாச்சி.
''பொதுக்குழு சம்பந்தமா, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''வழக்கமா, ஜெயலலிதா நடத்துற பொதுக்குழுவுல, மட்டன் பிரியாணி, சிக்கன், மீன், இறால், முட்டைன்னு, தடபுடலான அசைவ விருந்து குடுப்பாங்க... இந்த முறை, அ.தி.மு.க., பொதுக்குழுவுல, சைவ சாப்பாடு தான் போட்டாங்க பா...''இதனால பலர், சாப்பிடாமலே போயிட்டாங்க... 'கார்த்திகை மாசம், நிறைய பேர் சபரிமலைக்கு மாலை போட்டிருப்பாங்கன்னு தான், அசைவம் ஏற்பாடு செய்யலை'ன்னு, உயர்மட்ட நிர்வாகிகள் சொல்லிட்டாங்க பா...''அதே நேரம், பொதுக்குழுவுக்கு செய்தி சேகரிக்க வந்த, 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, பக்கத்துலயே இருக்கிற, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் வீட்டுல, மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல் எல்லாம் தயார் பண்ணி, பார்சலா எடுத்துட்டு வந்தாங்க... ''முதல்வர் பேச்சை, பத்திரிகையாளர்கள் சீரியசா குறிப்பு எடுத்துட்டு இருந்தப்ப, அந்த பார்சல்களை, பாதுகாப்புக்கு இருந்த போலீசார், மொத்தமா அள்ளிட்டு போயிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஒரே வருஷத்துல, 50 லட்சம் ரூபாய் மதிப்புல வீடு கட்டிட்டாருங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.''யார் ஓய் அந்த பணக்காரர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''கடலுார் மாவட்டத்துல இருக்கிற தனிப்பிரிவு ஏட்டு ஒருத்தர், மணல் திருட்டு, கள்ளச்சாராய விற்பனை, சட்டவிரோத, 'பார்'கள்னு, மாமூல்ல கொழிக்கிறாருங்க...''இவர் பகுதியில இருக்கிற கல் குவாரியில, 'ரெய்டு' நடத்துன போலீசாரை, பகிரங்கமாவே மிரட்டி, அந்த பஞ்சாயத்து, மனித உரிமைகள் ஆணையம் வரை போயிடுச்சுங்க... அதே மாதிரி, உள்ளூர் நிருபர் ஒருத்தரை, ஆள் வச்சு அடிக்க ஏற்பாடு செஞ்சிட்டாருங்க...''இது பத்தி எல்லாம், எஸ்.பி., வரைக்கும் புகார் போயும், இவர் மேல நடவடிக்கை இல்லை... ஏன்னா, எஸ்.பி., அலுவலகத்துல இருக்கிற முக்கிய அதிகாரியை, ஏட்டு சிறப்பாவே, 'கவனிச்சி' வச்சிருக்காருங்க... இதனால, ஒரே வருஷத்துல, 50 லட்சம் ரூபாய்ல வீடு, கார்னு பக்காவா செட்டில் ஆகிட்டாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''தண்டபாணி இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ
28-நவ-201910:37:53 IST Report Abuse
A R J U N ..................இது பத்தி எல்லாம், எஸ்.பி., வரைக்கும் புகார் போயும்....இதுதான் பெரிய அதிகாரியின் லக்ஷணமோ..ஒரு ஏட்டு,எல்லோரையோம் கவர் பண்ணுகிறார் என்றால் அது அரசுக்கு எத்தனை சிறுமை,தலைகுனிவு,வெட்கப்படவேண்டு,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X