சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 27, 2019
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'உங்களைப் போன்ற திறமைசாலிகள், பா.ஜ.,வில் நிறைய இருப்பதால் தான், யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில், மூன்று மாதங்கள் ஓடி விட்டன போலும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி: பா.ஜ., தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. ஏனெனில், நானே என்னை திறமையானவன் என, சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. என் திறமையை யார் பயன்படுத்துகின்றனரோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பயன்படுத்தவில்லை என்றால், எனக்கு நஷ்டமில்லை.
'அரசின் பெரும்பாலான நல்ல திட்டங்கள், பொறுப்பற்ற சில அதிகாரிகளால் வீணாகுகின்றன என்பதற்கு, இதுவே நல்ல எடுத்துக்காட்டு' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு பின், அரசு அனுமதித்துள்ள அளவில், பிளாஸ்டிக் பைகளை வணிகர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஆய்வு என்ற பெயரில் வரும் அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கின்றனர்.
'அப்போ, கடந்த முறை, சுப்ரீம் கோர்ட் போய், தி.மு.க., தடை வாங்கியதே... அக்கட்சிக்கும் தோல்வி பயம் தான் காரணமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி: தோல்வி பயம் காரணமாகவே, உள்ளாட்சி தேர்தலை, தமிழக அரசு தள்ளிக் கொண்டே போகிறது. தேர்தலை நடத்த, அ.தி.மு.க., அரசுக்கு விருப்பம் இல்லை. அதனால் தான், இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் மூலம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
'தமிழகத்தில், 10 படங்களில் நடித்து விட்டால், முதல்வர் பதவி மீது ஆசை வந்து விடும் என்பதற்கு, உங்கள் பேச்சே, நல்ல உதாரணம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் பேட்டி:விஜய் பேசுவதை அரசியல் என, சொல்லாதீர்கள். சமூக கருத்து என்பது தான் சரியாக இருக்கும். எனினும், அரசியலுக்கு வருவதற்கான தகுதிகள் அனைத்தும் விஜயிடம் உள்ளன. ஆனால், எப்போது அவர் அரசியலுக்கு வருவார் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.
'தமிழ் போர்வையாளர்கள் உங்கள் பேச்சை கவனிக்கவில்லை... 'பகவத் கீதை என்ற வார்த்தையை, வட நாட்டைச் சேர்ந்த, தலைமை நீதிபதி பயன்படுத்தி விட்டார்' என கூறி, போராட்டங்களை அறிவித்து விடுவர், நல்லவேளை...' என, சொல்லத் தோன்றும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி பேச்சு: சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் அரசியல் சாசனம், அனைத்து சட்டங்களுக்கும் தாயாக விளங்குகிறது. அரசியல் சாசனம், பகவத் கீதை போன்றது. அது உங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுத் தரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X