பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 27, 2019
Advertisement

நவம்பர் 28, 1890
மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே: மஹாராஷ்டிர மாநிலம், சாட்ரா மாவட்டம், கட்கன் எனுமிடத்தில், 1827 ஏப்., 11ல் பிறந்தார். இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி. சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், அவற்றை களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று, தனியே பள்ளிகளை நடத்தியவர்.ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள், இவரும் ஒருவர். 1857ல் சிப்பாய் கலகத்தை இவர், உயர் ஜாதி ஹிந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார். கணவனை இழந்த பெண்களுக்கான இல்லத்தை, 1863ல் நிறுவினார். 1864ல் நடந்த சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில், இவரது பங்கு முக்கியமானது. 1873ல், தன் ஆதரவாளர்களுடன் இணைந்த இவர், 'சத்ய சோதக் சமாஜம்' எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால், இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம், காங்கிரசுடன் கரைந்தது. 1890 நவ.,28ல் காலமானார்.அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X