சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

அறைகள் எனக்கு சலிப்பூட்டுகின்றன!

Added : நவ 27, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
வலிப்பு நோயாளியை காப்பாற்றப் போய், கொலைப் பழி சுமத்தப்பட்டு, கைதாகி, பின் விடுதலையான, எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள, பத்தினிப்பாறையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், மும்பைக்குச் சென்றேன். அப்போது மும்பை இல்லை; பம்பாயாகத் தான் இருந்தது.டீக்கடை, லேத் பட்டறை வேலைகளில் ஈடுபட்டேன். பல ஆண்டு உழைப்புக்குப் பின், சொந்தமாக லேத்
 அறைகள் எனக்கு சலிப்பூட்டுகின்றன!

வலிப்பு நோயாளியை காப்பாற்றப் போய், கொலைப் பழி சுமத்தப்பட்டு, கைதாகி, பின் விடுதலையான, எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா:
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள, பத்தினிப்பாறையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், மும்பைக்குச் சென்றேன். அப்போது மும்பை இல்லை; பம்பாயாகத் தான் இருந்தது.டீக்கடை, லேத் பட்டறை வேலைகளில் ஈடுபட்டேன். பல ஆண்டு உழைப்புக்குப் பின், சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வந்தேன்.பாபர் மசூதி இடிப்பின் போது ஏற்பட்ட கலவரங்களில், என் பட்டறையும் அழிந்தது. 2000ம் ஆண்டு, என் நிழலை மட்டும் சுமந்து, சென்னை வந்து விட்டேன். அப்போதிலிருந்து இப்போது வரை, சென்னை வீதிகள் தான் சொந்த ஊராக விளங்குகின்றன.கோயம்பேடு சந்தை அருகே, வலிப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்த ஒருவரை காப்பாற்ற, அவரை என் மடியில் கிடத்தி, அவர் கையில் இரும்பு கம்பியை கொடுத்துக் கொண்டிருந்தேன். அதை துார இருந்து பார்த்தவர்கள், நான் அவரை கம்பியால் குத்திக் கொல்வதாக கருதி, என்னை அடித்தனர்; போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் என்னை கைது செய்து, அழைத்துச் சென்றனர்.மறுநாள் பிரேத பரிசோதனையில், நான் குற்றமற்றவன்; இறந்தவருக்கு வலிப்பு நோய் இருந்தது; அதனால் தான் அவர் இறந்தார் என்பது நிரூபணம் ஆனது. போலீசார் என்னை விடுதலை செய்தனர். சென்னை கே.கே.நகரில், 'மேன்ஷன்' ஒன்றில் தங்கி இருக்கிறேன். அறைகள் எனக்கு சலிப்பூட்டுகின்றன; கடற்கரை தான் எனக்கு நெருக்கமாக இருக்கிறது. சிறு வயதில் சரியாக படிக்கவில்லை. அப்பாவுக்காக எதையாவது எழுத வேண்டும் என விரும்பினேன். கவிஞர் கண்ணதாசனை புகைப்படங்களில் பார்த்து, கவிதைகள் எழுதத் துவங்கினேன். கவிதை எழுதுவது எனக்கு ஒரு மயக்கத்தை கொடுத்தது; மன நிம்மதியையும் அளித்தது.நான் எழுதிய, 'சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்' என்ற நுாலை, கோயம்பேடு சுமை துாக்கும் தொழிலாளர்கள் சேர்ந்து, நுாலாக தயாரித்து, வெளியீட்டு விழா நடத்தி, வெளியிட்டனர்.காமராஜ் என்ற திரைப்படத்திற்கு, கதை, வசனம் எழுதினேன். நமனை அஞ்சோம் என்ற படத்திற்கு, ஆறு பாடல்களை எழுதியுள்ளேன்; படம் இன்னும் வெளிவரவில்லை. அது வெளியானால், என் மீதும் வெளிச்சம் விழும்; என் வாழ்க்கையும் செழிக்கும்.மூன்று இட்லிகளைக் கூட என்னால் சாப்பிட முடியாது. அதை வாங்கக் கூட, சில சமயங்களில் பணம் இருக்காது. முகம் தெரியாதவர்கள், நண்பர்கள் உதவியால், அவர்கள் காட்டும் அன்பால், என்னுள் இருக்கும் வெற்றிடம் நிரம்புகிறது. இது நாள் வரை, அவர்கள் தான் என்னைப் பார்த்துக் கொள்கின்றனர்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-நவ-201917:25:39 IST Report Abuse
Lion Drsekar இதுதான் இன்றய உலகம், இந்த நிலையில் நான் பெற்ற துன்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல, இருந்தும் உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை, மருத்துவம் சார்ந்தது அல்ல. ஒரு புத்தகமே போடலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28-நவ-201909:30:34 IST Report Abuse
ஆரூர் ரங் வலிப்பு நோயாளி கையில் இரும்பைக் கொடுப்பது அர்த்தமற்றது .மூடநம்பிக்கை .அதனால் வலிப்பு நிற்காது .அந்தக் கம்பியால் தன்னையே கூட குத்திக் காயப்படுத்திக்கொள்ளும் அபாயமுள்ளது .இந்த செய்தியை பரப்புவதையாவது வாழ்க்கையின் நோக்கமாக வைத்திருக்கட்டும்
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
28-நவ-201905:48:39 IST Report Abuse
Pannadai Pandian why jesus make you rich ? will he show mercy to only hindus ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X