பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் இலவச 'வைபை' வசதி: களமிறங்கி கலக்கும் பி.எஸ்.என்.எல்.,

Updated : நவ 28, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (1)
Advertisement
கிராமங்களில் இலவச 'வைபை' வசதி: களமிறங்கி கலக்கும் பி.எஸ்.என்.எல்.,

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கிராமப்பகுதிகளில் பொதுமக்கள், மாணவர்கள் பயனடையும் வகையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இலவச 'வைபை' வசதி வழங்கி வருகிறது.

மத்திய அரசு இந்தியாவை நவீனப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மூலம் கிராமங்களில் இலவச 'வைபை' சேவை வழங்குகிறது.பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுப்பகுதியில் உள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில், யு.எஸ்.ஓ.எப்., எனப்படும் 'யுனிவர்சல் சோஷியல் ஆப்ளிகேஷன் பண்ட்' திட்டம் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், பி.எஸ்.என்.எல்., எக்ஸ்சேஞ்சில் இருந்து, 100 - 150 மீட்டர் தொலைவுக்கு 'வைபை' வசதி மூலம் 'இன்டர் நெட்' சேவை கிடைக்கிறது. ஒரு மொபைல் எண்ணுக்கு, ஒரு மாதத்துக்கு, நான்கு 'ஜிபி' அளவுக்கு இலவச இணைய இணைப்பு பெறலாம். அதிகபட்சமாக, 10 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இந்த 'ஹாட் ஸ்பாட்' வசதி கிடைக்கிறது.அதற்கு மேல் இணைய வசதி தேவைப்படுவோர், ஆன்லைனில் பணம் செலுத்தி, கூடுதல் சேவை பெறலாம். 20 ரூபாய் முதல் திட்டம் உள்ளது.அல்லது, வீட்டில் பி.எஸ்.என்.எல்., பிராட் பேண்ட் இணைப்பு உள்ளோர்கள், வெளியூர் செல்லும் போது, 'வைபை' பயன்படுத்த நினைத்தால், வீட்டு இணைப்பின் பயனாளர் பெயர் (யூசர் நேம்), கடவுச் சொல் (பாஸ் வேர்ட்) பதிவிட்டு, 'வைபை' வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த சேவை, 'ஆப்டிகல் பைபர் கேபிள்' மூலம் வழங்கப்படுவதால், இயற்கை சீற்றம் உள்ளிட்ட சூழல்களில், எந்த மொபைல் போன் டவர்களும் செயல்படாத நிலையிலும், அவசர தகவல் தொடர்புக்கு உதவுகிறது.கிராமப்புற மாணவர்கள் இலவசமாக அதிவேக இணையத்தை பயன்படுத்தி, கற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டம், அதிவேக இணைய சேவை இல்லாத கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.

பயன்பெறும் கிராமங்கள்!பொள்ளச்சி, வால்பாறை பகுதிகளில், டி.நல்லிக்கவுண்டன் பாளையம், வடக்கிபாளையம், எஸ்.குமாரபாளையம், கோவில்பாளையம், பெதப்பம்பட்டி, செட்டியக்காபாளையம், ஏரிப்பட்டி, ஜக்கார்பாளையம், மெட்டுவாவி, மண்ணுார், கோமங்கலம், தேவனுார்புதுார், கம்பாலபட்டி, அங்கலக்குறிச்சி, கஞ்சம்பட்டி, ஆழியாறு, முடீஸ், பரம்பிக்குளம், சோலையார் நகர் பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., எக்ஸ்சேஞ்ச் மூலம், இலவச 'வைபை' வசதி தற்போது வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hari -  ( Posted via: Dinamalar Android App )
29-நவ-201902:05:43 IST Report Abuse
hari மொதல்ல காசு குடுத்து உங்க சர்வீஸ் வாங்கி பழுதானதை சரி செய்வதற்கு ஆளை அனுப்புங்க....... நீங்க இலவசமா குடுக்குற லட்சணம் தெரியாதா என்ன.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X