மினி டேங்க் மோட்டார் பழுது: குடிநீருக்கு மக்கள் அவதி

Added : நவ 27, 2019
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு: பாளையஞ்சேர்ந்தங்குடி கிராமத்தில் மினி டேங்க் போர்வெல் பழுதடைந்ததால், குடிநீருக்கு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கீரப்பாளையம் ஒன்றியம், பாளையஞ்சேர்ந்தங்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுக்குளம் கரையில் அமைக்கப்பட்டுள்ள மினி டேங்கில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.கடந்த 2

சேத்தியாத்தோப்பு: பாளையஞ்சேர்ந்தங்குடி கிராமத்தில் மினி டேங்க் போர்வெல் பழுதடைந்ததால், குடிநீருக்கு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கீரப்பாளையம் ஒன்றியம், பாளையஞ்சேர்ந்தங்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுக்குளம் கரையில் அமைக்கப்பட்டுள்ள மினி டேங்கில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.கடந்த 2 மாதங்களுக்கு முன், போர்வெல் மோட்டார் பழுதடைந்ததால், குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. பழுதடைந்த மோட்டாரை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, ஒன்றிய அதிகாரிகள் பழுதடைந்துள்ள மினி டேங்க் மோட்டாரை சீரமைத்து, குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X