புதுடில்லி:''வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் நாட்டின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் இல்லை'' என ராஜ்யசபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து ராஜ்யசபாவில் நேற்று விவாதம் நடந்தது. பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.இதற்கு பதில் அளித்து நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை. வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் மந்தமான சூழ்நிலை இல்லை.பொருளாதாரம் எப்போதும் மந்தநிலைக்குவராது. கடந்த 2009- - 2014-ம் நிதியாண்டின் இறுதியில் ஜி.டிபி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தி 6.4 சதவீதமாக இருந்தது. 2014 - -19 நிதியாண்டில் 7.5 சதவீதமாக உள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆனால் அமைச்சர் விளக்கத்துக்கு நடுவே அதிருப்தி தெரிவித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.இதை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன் ''ஒரு விவாதத்தை கோருவதும் அதற்கு அரசு பதில் அளிக்கும்போது வெளிநடப்பு செய்வதும் 2014 முதல் எதிர்க்கட்சிகளின் பழக்கமாகிவிட்டது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE