பொது செய்தி

தமிழ்நாடு

மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல அளவிலான கருத்தரங்கம்

Added : நவ 27, 2019
Advertisement

கடலுார்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம் மண்டலம் சார்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் கடலுார் டவுன்ஹாலில் நடந்தது.மண்டல செயலர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி, மாநில செயலர் காங்கேயன் முன்னிலை வகித்தனர். வட்ட செயலர் தேசிங்கு வரவேற்றார். மாநிலத் தலைவர் ஜெயசங்கர், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலர் கருப்பையன், துணைப் பொதுச் செயலர் பழனிவேல், மாதவன், விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச் செயலர் ரவீந்திரன் கருத்துரையாற்றினர்.அரசுத் துறையான மின்சார வாரியம் பொதுத் துறையாகவே நீடிக்க வேண்டும். மின்வாரிய சட்டத் திருத்த மசோதா 2018ஐ கைவிட வேண்டும்.விவசாயம், சிறு, குறு தொழில்களுக்கு இலவச மின்சாரமும், மானிய விலையில் மின்சாரமும் தொடர்ந்து கிடைத்திட உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X