அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்

Added : நவ 27, 2019
 அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்ட பணியாளர்களின் அலட்சிய பணியால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவது தொடர்கதையாகி வருகிறது.

இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90,124 மக்கள் தொகை உள்ளது. ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு தினமும், 9.3 மில்லியன் லட்சம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மற்ற பயன்பாட்டுக்காக தனியாக போர்வெல் தண்ணீரும் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் போது, குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.பொள்ளாச்சி மரப்பேட்டை அருகே குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு கொண்டு வரப்படும் பிரதான குடிநீர் குழாயினை பாதாள சாக்கடை திட்டப்பணியின் போது உடைத்ததால், குடிநீர் வீணாகிறது.அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, பொள்ளாச்சி நகருக்கு சுத்திகரித்த குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அதிகாரிகள் கண்காணிப்பு செய்து அறிவுறுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், குடிநீர் குழாய்களை பணியாளர்கள் உடைத்துள்ளனர்.

இதனால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி, ரோட்டில் ஓடி, சாக்கடை கால்வாயில் கலந்தது. தகவல் அறிந்த அதிகாரிகள், அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டப்பணியால், குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. பல இடங்களில், குடிநீர், கழிவுநீருடன் கலந்து வரும் அபாயம் உள்ளது. அலட்சிய பணிகளால், சிரமத்துக்குள்ளாகிறோம்.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இப்பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். குடிநீர் வீணாவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

இதற்கு, யார் பொறுப்பு?நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டப்ப ணியின் போது, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, பணிகள் நடக்கும் இடத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய வேண்டும். குழாய்கள் செல்லும் பகுதியில் கவனமாக குழி தோண்ட வேண்டும்,' என்றனர்.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கவனமாகத் தான் குழி தோண்டப்படுகிறது. குழி தோண்டும் ரோடுகள் குறித்து நகராட்சிக்கு தெரிவிக்கப்படுகிறது.

அங்கு, அவர்களும் கண்காணிப்பு செய்து, குழாய் உடையாமல் பாதுகாக்க வேண்டும்,' என்றனர். இரு துறையினரின் அலட்சிய போக்கால், குழாய் உடைந்து குடிநீர் வீணாவதுடன், பணிகள், போக்குவரத்து பாதிப்பும், அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது என்பதே உண்மை.இதற்கு, யார் பொறுப்பு?நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டப்பணியின் போது, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, பணிகள் நடக்கும் இடத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.

குழாய்கள் செல்லும் பகுதியில் கவனமாக குழி தோண்ட வேண்டும்,' என்றனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கவனமாகத் தான் குழி தோண்டப்படுகிறது. குழி தோண்டும் ரோடுகள் குறித்து நகராட்சிக்கு தெரிவிக்கப்படுகிறது. அங்கு, அவர்களும் கண்காணிப்பு செய்து, குழாய் உடையாமல் பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.இரு துறையினரின் அலட்சிய போக்கால், குழாய் உடைந்து குடிநீர் வீணாவதுடன், பணிகள், போக்குவரத்து பாதிப்பும், அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது என்பதே உண்மை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X