நிறைவேறியது எஸ்.பி.ஜி., சட்ட திருத்த மசோதா

Added : நவ 27, 2019 | கருத்துகள் (2)
Advertisement
நிறைவேறியது எஸ்.பி.ஜி., சட்ட திருத்த மசோதா

புதுடில்லி சிறப்பு பாதுகாப்பு படை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு 'இஸட் ஸ்பெஷல்' எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மத்திய அரசு அளித்து வருகிறது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங். இடைக்கால தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு சமீபத்தில் 'வாபஸ்' பெறப்பட்டது.அவர்களுக்கு 'இஸட் பிளஸ்' பாதுகாப்பு தொடரும் என மத்திய அரசு அறிவித்தது.பிரதமர் மற்றும் அவருடன் வசிக்கும் நெருங்கிய உறவினர்கள் பதவி விலகி ஐந்தாண்டுகள் வரையிலான முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவருடன் வசிக்கும் உறவினர்களுக்கு மட்டும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.இதற்கு காங். உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டபோது ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. சோனியா குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட பின் தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர்.சோனியா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை. அது இஸட் ஸ்பெஷலில் இருந்து இஸட் பிளஸ் ஆக மாற்றப்பட்டு உள்ளது.சிறப்பு பாதுகாப்பு படை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தையே முந்தைய அரசுகள் நீர்த்துப்போக செய்துவிட்டன. அதை நிறைவேற்ற தான் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
28-நவ-201906:49:44 IST Report Abuse
natarajan s அவர்களை பார்க்கும்போதெல்லாம் சிறையில் இருந்து எஸ்கார்ட்களுடன் நீதிமன்றம் செல்லும் கைதிகளின் நினைப்புதான் வருகிறது . நீ பதவியில் இருக்கும்போது மக்களுக்கு நல்லது செய்திருந்தால் உனக்கு மக்களே பாதுகாப்பு அளிப்பார்கள் எதற்கு Z ஸ்பெஷல் மற்றும் Z Plus பாதுகாப்பு ? இதில் பெரிய irony , பாராளுமன்றத்தில் இவர்களுக்கு விடுதலை புலிகளால் இன்னும் ஆபத்து உள்ளது ஆகையால் SPG நீடிப்பு வேண்டும் என்று வாதிடும் திமுக மாநிலத்தில் ராஜீவை கொன்றவர்களுக்கு உதவிய 7 அப்பாவி தமிழருக்கு விடுதலை வேண்டி போராட்டம் . e
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
28-நவ-201902:50:35 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லது நல்லவர்கள் சுயநலம் பாரார் கண்துஞ்சார் தன் கருமமே கண்ணாக நினைப்பார் .ஆனால் அல்லோர்கள் ஆட்சிக்கு வந்து ஊழல் செய்துவிட்டு தப்பிக்க கோடி கோடி யாக கோர்ட்டாருக்கு கொடுத்து உயிர் வளர்ப்பர். நல்லவர்கள் நாட்டை ஆளனும் இறைவன் அருளனும் அதுதான் நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X