பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் குடிநீர் இடைவேளை புது திட்டத்தால் மாணவர் உற்சாகம்

Added : நவ 27, 2019
Advertisement

வால்பாறை : வால்பாறை அரசு பள்ளிகளில், மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காக குடிநீர் இடைவேளை நடைமுறைக்கு வந்தது.

வால்பாறை தாலுகாவில் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி, அரசு நலப்பள்ளி, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம், 91 பள்ளிகள் உள்ளன.தமிழகத்தில், அனைத்துப்பள்ளிகளிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொரு பாட வேளை முடிந்தவுடன், தண்ணீர் அருந்துவதற்கு, 10 நிமிடம் இடைவேளை விட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது.

அதன் படி. வால்பாறை மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில், ஒவ்வொரு பாடவேளை முடிந்தவுடன், மாணவர்கள் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்கப்பட்டது.வால்பாறை நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைசெல்வி கூறியதாவது:பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பாட இடைவேளையின் போது, தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாகவும், மாணவர்கள் சுறுசுறுப்பாகவும் உள்ளனர்.

அதே போல் மதிய உணவு இடைவேளையின் போது, மாணவர்கள் தவறால் சோப்பு போட்டு கை கழுவிய பின், உணவு அருந்த வேண்டும் என்ற பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X