சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் போராட்டத்தால் சத்துணவு ஊழியர்கள் மாற்றம்

Added : நவ 27, 2019
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, குள்ளிச்செட்டிபாளையம் துவக்கப்பள்ளியில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, சத்துணவு ஊழியர்கள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி, குள்ளிச்செட்டிபாளையம் துவக்கப்பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் கல், மண்ணுடன் பரிமாறப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். பள்ளி நேரம் முடிந்தும் வெளியேறாமல், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம், பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள், வெளியில் நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார், தொடக்கக்கல்வி அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, குள்ளிசெட்டிபாளையம் சத்துணவு அமைப்பாளர் சகுந்தலாதேவி, ஆ. சங்கம் பாளையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சமையலர் ராஜாமணி, வடக்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும்; சமையல் உதவியாளர் அருக்காணி, சி.கோபாலபுரம் துவக்கப்பள்ளிக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X