பொது செய்தி

தமிழ்நாடு

வேகமாக பரவும் 'டெங்கு' கிராமத்தில் மக்கள் அச்சம்

Added : நவ 27, 2019
Advertisement

பொங்கலூர் : மழைக் காலம் துவங்கியதும் முதல் பொங்கலூர், கொடுவாய், பெருந்தொழுவு, கேத்தனூர், தொங்குட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாச்சிபாளையம் அரசு பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவர் மற்றும் மாணவிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் கொசு மருந்து தெளித்தும், மருத்துவ முகாம் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்கள் வீடுகளில் சோதனையிட்ட போது பல வீடுகளில் கொசு புழு உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணியாளர்களைச் கொசு ஒழிப்பு பணிக்கு ஒத்துழைப்பு தர மறுத்த இரண்டு குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இப்பகுதியில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியினர் கூறுகையில், 'சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதில் தூய்மை காவலர்களின் பணி இன்றியமையாதது. குறைந்த ஊதியம் கிடைப்பதால் பலர் வேறு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கொசுக்கள் பெருகி விடுகிறது.பாலீதின் கவர் பயன்பாடு இன்னும் குறைந்தபாடில்லை. இதை கட்டுப்படுத்த முன்வராததால் பல இடங்களில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X