பொது செய்தி

தமிழ்நாடு

பட் பட்டென தெறிக்க விட்ட மாணவர்கள் பட்டம் வினாடி வினா போட்டியில் அசத்தல்

Added : நவ 27, 2019
Advertisement

பொள்ளாச்சி : 'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' இணைப்பு சார்பில், வினாடி வினா போட்டியில் மாணவர்கள் அறிவுத் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

'தினமலர்' நாளிதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து, மெகா வினாடி வினா போட்டி, பொள்ளாச்சி ஆச்சிபட்டி சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது. பள்ளியின் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டிக்கு, பள்ளி தாளாளர் செல்வநாயகம் தலைமை வகித்தார். முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார்.தகுதிச்சுற்றுக்கான பொது அறிவு எழுத்து தேர்வில், 158 பேர் மாணவர்கள் பங்கேற்றனர்.

அதில், 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, அணிக்கு இரண்டு பேர் கொண்ட எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். 'ஏ' முதல் 'எச்' வரை அணிகளுக்கு ஆங்கில அகர வரிசைப்படி பெயரிடப்பட்டது. தொடர்ந்து, ஆசிரியர்கள் பிரியா, காளீஸ்வரி, நித்யா, ராமன் மேற்பார்வையில் காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பட் பட்டென பதிலளித்து, 'சி' அணி வெற்றி பெற்றது. அணியின் போட்டியாளர்கள் சுபஹரிணி, ரிதன்யா ஆகியோரை ஆசிரியர்கள் பாராட்டி, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X