சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோந்து போலீசுடன் மோதல் போதை ஆசாமிகள் மூவர் கைது

Added : நவ 27, 2019
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே போலீஸ் உடன் தகராறு செய்த போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் பிரதாப். இவர், வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றுள்ளார். அங்குள்ள வாய்க்கால் மேட்டில் மூன்று பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த கான்ஸ்டபிள், பொது இடத்தில் மது அருந்தக்கூடாது என எச்சரித்துள்ளார். இதையடுத்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை ஆசாமிகள் போலீஸ் உடன் தகராறு செய்து, அவரிடம் இருந்த வாக்கி டாக்கியை பறிக்க முயன்றுள்ளனர்.

கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில், பிரதாப் புகார் அளித்துள்ளார். விசாரணையில், போலீஸ் உடன் தகராறு செய்தவர்கள் சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த நிஜாமுதீன், 50; ஜாபருல்லா, 49; கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்த ஐயப்பன், 39, என்பது தெரியவந்தது.அவர்கள் மீது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குபதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X