பொள்ளாச்சி : உடுமலை நஞ்சேகவுண்டன்புதுாரை சேர்ந்தவர் நடராஜ், 50 கூலித்தொழிலாளி. இவர், பணிக்கம்பட்டி அருகேயுள்ள தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கி, வேலை செய்து வந்தார்.சமையலுக்கு காஸ் சிலிண்டர் பயன்படுத்தி வந்தார். சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்தது. இது தெரியாமல், கொசுவர்த்தி கொளுத்த தீக்குச்சி பற்ற வைத்த போது, அறையில் தீப்பிடித்து உடல் கருகியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
Advertisement