பொது செய்தி

தமிழ்நாடு

திருந்திய வனக்குற்றவாளிகள் நடிக்கும் விழிப்புணர்வு குறும்படம்

Added : நவ 27, 2019
Advertisement
திருந்திய வனக்குற்றவாளிகள்  நடிக்கும் விழிப்புணர்வு குறும்படம்

கூடலுார், வனப்பகுதியை பாதுகாப்பதற்காக திருந்திய தமிழக வனக்குற்றவாளிகளை நடிக்க வைத்து விழிப்புணர்வு குறும்படத்தை தயாரிக்கும் பணியில் கேரள வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கேரள மாநிலம் பெரியாறு புலிகள் சரணாலயம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இங்கு வனவிலங்கு வேட்டை, மரக்கடத்தல் அதிகமாக நடந்தது. இதில் அதிகமாக தமிழகப்பகுதியில் உள்ள தேனிமாவட்ட பகுதினர் ஈடுபட்டு வந்தனர். அவர்களை 2004ல் ஒருங்கிணைத்து அவர்களுக்கு கேரள வனத்துறையில் வேலை கொடுப்பதாகஅறிவித்தனர். அதனடிப்படையில் 23 பேர் கேரள வனத்துறையில் சரணடைந்தனர். அவர்களின் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இனி குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவர்களை ஒருங்கிணைத்து 'விடியல் வனக்குழு' என ஆரம்பித்து அவர்களுக்கு கேரள வனத்துறையில் வனக்காவலர் வேலை கொடுத்து தலா ரூ.17,500 சம்பளமாக வழங்கி வருகின்றனர். இதனால் கேரள வனப்பகுதியில் வேட்டையாடுதல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறைந்துள்ளன.இந்நிலையில் வனக்குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கேரள வனத்துறையினர், அவர்கள் வாழ்க்கையை மையக்கருத்தாக வைத்து குறும்படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தை 2004 ல் தேக்கடியில் ரேஞ்சராக இருந்த ராஜூ பிரான்சிஸ் இயக்குகிறார். அவர் தற்போது விஜிலன்ஸ் டி.எப்.ஓ., வாக பணியாற்றுகிறார். இப்படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் விடியல் வனக்குழுவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். குற்றச்செயல்களில் ஈடுபட்டதில் இருந்து திருந்தி, வனக்குழு மூலம் கேரள வனத்துறையில் பணியாற்றுவது வரை இக்கதை தயாரிக்கப்படுகிறது. தற்போது தேக்கடி வனப்பகுதியில் இதற்கான படப்பிடிப்பு நடக்கிறது. இக்குறும்படம் மூலம் அனைத்து வனப்பகுதியிலும் குற்றச்செயல் குறையும் வாய்ப்புகள் உருவாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X