பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை விலை சரிவு விவசாயிகள் கவலை

Added : நவ 27, 2019
Advertisement

ஆனைமலை : ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணிவாசகம் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.

முதல் தர கொப்பரை, 345 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 90.65 முதல், 94 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 283 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 55.85 முதல், 78.85 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.மொத்தம், 628 கொப்பரை மூட்டைகளை, 108 விவசாயிகள் கொண்டு வந்தனர், 16 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொப்பரை கிலோவுக்கு, ஆறு ரூபாய் குறைந்தது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X