பொது செய்தி

தமிழ்நாடு

மோடியால் பாராட்டப்பட்டவர் ஊருக்குள் சேர்க்கப்பட்டார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Added : நவ 27, 2019
Advertisement

மூணாறு :மோடியால் பாராட்டப்பட்டவர் உட்பட இருவர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.கேரளா, மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் 28 கிராமங்களில்முதுவான் இனமலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு தனது டீக்கடையில் நுாலகம் நடத்தி வருவதற்காக சின்னத்தம்பி என்பவர் சில நாட்களுக்கு முன் 'மான்கிபாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டார்.மலைவாழ் மக்கள் குறித்து மிளகுதரகுடியில் ஆசிரியராக பணியாற்றும் முரளிதரன் எழுதிய நுாலில் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், நுால் எழுதுவதற்கு சின்னதம்பி உதவியதாகவும் கூறி இருவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.சின்னதம்பி, முரளிதரன் ஆகியோர் புகாரின்பேரில் தேவிகுளம் சப் கலெக்டர் பிரேம்கிருஷ்ணன் விசாரித்தார்.உடன்பாடு அவரது தலைமையில்மலைவாழ் மக்கள் கிராம காணி (ஊர் தலைவர்), ஊர் பெரியவர்கள் கூட்டம் நடந்தது. தாசில்தார் குன்னப்பிள்ளி, மலைவாழ் மக்கள் நலத்துறை அதிகாரி பிரதீப்குமார், சின்னத்தம்பி, முரளிதரன் பங்கேற்றனர்.ஊர் கூட்டத்தில் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்த ஊர் மக்கள் இருவரையும் மீண்டும் ஊருக்குள் சேர்க்க ஒப்புக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X