சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து இழப்பீடு வழங்காததால் விருதையில் அரசு பஸ் ஜப்தி

Added : நவ 27, 2019
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.விருத்தாசலம் லுாகாஸ் தெருவை சேர்ந்தவர் சுலைமான் மகன் முகமது கனி, 48. கடந்த 2009, ஜனவரி 13ம் தேதி விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் பைக்கில் சென்றபோது, அரசு பஸ் மோதி காயமடைந்தார்.விபத்து இழப்பீடு கோரி, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை நிர்வாகம் மீது விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில், கடந்த 2012ம் ஆண்டில், 1 லட்சத்து 91 ஆயிரத்து 630 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, அப்போதைய முதன்மை சார்பு நீதிபதி கிங்ஸ்லின் கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.கடந்த 2014ம் ஆண்டு, முகமது கனி சார்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இழப்பீடு வழங்காமல் கால தாமதம் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து, கடந்த 2015, நவம்பர் 3ம் தேதி, 2 லட்சத்து 80 ஆயிரத்து 760 ரூபாய்க்கு, 2 லட்சத்து 40 ஆயிரத்து 64 ரூபாய் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட நிலையில், 40 ஆயிரத்து 696 ரூபாய் செலுத்தவில்லை.இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி நடந்த விசாரணையில், வட்டியுடன் 58 ஆயிரத்து 812 ரூபாய் செலுத்த வேண்டும், இல்லாவிட்டால், அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு, நீதிபதி ஜெயசூர்யா உத்தரவிட்டார்.அதன்படி, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து கடலுார் புறப்பட்ட அரசு பஸ்சை, முதுநிலை நிறைவேற்றுனர் ராதிகாதேவி, வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், காமராஜ் ஆகியோர் ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X