பொது செய்தி

தமிழ்நாடு

'ஆற்றில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்'

Added : நவ 27, 2019
Advertisement

ஆனைமலை : ''ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, விரைவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் வேலுமணி உறுதியளித்தார்.

முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம், ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. எம்.எல்.ஏ., கஸ்துாரி தலைமை வகித்தார். முகாமில், அனைத்து அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.மக்களிடம் இருந்து, முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா உள்பட பல்வேறு அரசு திட்டங்களுக்கு மனுக்கள் பெறப்பட்டன. ஏற்கனவே மனுக்கள் பெறப்பட்ட, 1,858 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''மக்களின் பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, ஆனைமலை தாலுகா உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது, மக்கள் நலனுக்காக குறைதீர் முகாமும் நடத்தப்படுகிறது.

விவசாயிகள் நலனுக்காக, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். பி.ஏ.பி., ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்,'' என்றார்.உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''முகாமில், 1,858 பயனாளிகளுக்கு, 5.5 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஆனைமலையில் ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, விரைவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 57 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கி, கடன் பெற்று தொழில் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெண்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.

முன்னாள் எம்.பி., மகேந்திரன், முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், தாசில்தார் வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.தேர்வு நடப்பது தெரியாதா?ஆனைமலை அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்தேர்வு நடக்கும் நிலையில், நேற்று சிறப்பு குறைதீர் முகாம் பள்ளி வளாகத்தில் நடந்ததால், மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

வகுப்பறைகள் சிலவற்றை, ஆளும்கட்சியினர் சமையல் செய்வதற்காக பயன்படுத்தினர். மாணவர்களை வேறு கட்டடங்களுக்கு இடமாற்றம் செய்து தேர்வு எழுத வைத்தனர். ஒலிபெருக்கியால் இரைச்சல் ஏற்பட்டதால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.தேர்வு நடப்பது தெரியாதா?ஆனைமலை அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்தேர்வு நடக்கும் நிலையில், நேற்று சிறப்பு குறைதீர் முகாம் பள்ளி வளாகத்தில் நடந்ததால், மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

வகுப்பறைகள் சிலவற்றை, ஆளும்கட்சியினர் சமையல் செய்வதற்காக பயன்படுத்தினர். மாணவர்களை வேறு கட்டடங்களுக்கு இடமாற்றம் செய்து தேர்வு எழுத வைத்தனர். ஒலிபெருக்கியால் இரைச்சல் ஏற்பட்டதால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X