புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த கொத்தட்டையில் பசுமை தாயகம் சார்பில், பொது மக்களிடம் பிளாஸ்டிக் குப்பைகளை பெற்றுக்கொண்டு, அரிசி வழங்கும் முகாம் நடந்தது.பசுமை தாயக மாநில அமைப்பாளர் அழகரசன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலர் கருணைமூர்த்தி, பசுமை தாயகம் மாவட்ட செயலர் இளையராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பா.ம.க., மாவட்ட செயலர் முருகன் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை பெற்றுக்கொண்டு, 1 கிலோ அரிசி, மரக்கன்று வழங்கினார்.மாநில அமைப்பு துணை செயலர் அருள்கோவிந்தன், மாவட்ட துணை செயலர் கார்த்திக், ஒன்றிய செயலர்கள் மோகனசோமசுந்தரம், ரஞ்சித், ஒன்றிய அமைப்பு செயலர் இளங்கோராஜா, வழக்கறிஞர் பிரிவு காண்டீபன் பங்கேற்றனர்.