நல்ல நிலையில் உள்ள சாலையை கொத்தி மீண்டும் போடும் அவலம்

Added : நவ 27, 2019
Advertisement

கடலுார்: கடலுார் அருகே நல்ல நிலையில் உள்ள சாலையை கொத்திவிட்டு மீண்டும் சாலை போடப்படுகிறது என முன்னாள் ஊராட்சி தலைவர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.செம்மங்குப்பம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெகநாதன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:செம்மங்குப்பம் ஊராட்சி, வைரங்குப்பம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்போது நல்ல நிலையில் உள்ள இந்த சாலையை இரவோடு, இரவாக கொத்தி போட்டு, மீண்டும் புதிய சாலை போடும் ஏற்பாடு நடக்கிறது.அதே பகுதியில் காலனிக்கு செல்லும் சாலையும், செம்மங்குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலையும் மோசமாக உள்ள நிலையில், நல்ல நிலையில் உள்ள சாலையை கொத்திவிட்டு, மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் நடப்பது கிராம மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில், தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X