சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை தகராறில் முதியவர் கொலை இருவருக்கு பத்து ஆண்டு சிறை

Added : நவ 27, 2019
Advertisement
போதை தகராறில் முதியவர் கொலை இருவருக்கு பத்து ஆண்டு சிறை

தேனி, மதுகுடித்ததில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வள்ளியூர் அந்தோணி. மதுரை செல்லுார் மீனாட்சிபுரம் சித்திக். இருவரும் பிச்சை எடுத்து வந்தனர். மார்ச் 3 பகல் 2:45 மணிக்கு தேனி மாவட்டம் கம்பம் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள தனியார் லாட்ஜ் அருகே இணைந்து மது அருந்தினர். இவர்களுக்கு பழக்கமான பண்ணைப்புரத்தை சேர்ந்த காளிமுத்து 65, என்பவருடன் ஏற்பட்ட தகராறில், அவரை இருவரும் அடித்து, உதைத்து தள்ளிவிட்டனர். இதில் பஸ்சின் டயருக்கு அடியில் சிக்கி அவர் பலியானார்.கம்பம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X