தேனி :பெரியகுளம் அருகே தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காமு 29. இவர் 2017 மே 26ல் இரவு 9:00 மணிக்கு அதே பகுதி வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.காமுவிற்கு வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்காக ஓராண்டு சிறையும், ரூ.ஆயிரம் அபராதமும், 'போக்சோ ' பிரிவில் 10 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும்தண்டனையை தனித்தனியாக அனுபவிக்கவும் நீதிபதி கீதா நேற்று உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE