பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு வழங்குவதில் வெளிப்படை இல்லை

Added : நவ 27, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலைக்கு நிலம் அளிக்கும் விவசாயிகள், மர்ம நபர்கள் தங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்துவதாக புகார் எழுப்பியுள்ளனர். பொள்ளாச்சி - திண்டுக்கலை இணைக்கும், 3,649 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா'திட்டத்தில், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலைக்கு நிலம் அளிக்கும் விவசாயிகள், மர்ம நபர்கள் தங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்துவதாக புகார் எழுப்பியுள்ளனர்.

பொள்ளாச்சி - திண்டுக்கலை இணைக்கும், 3,649 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா'திட்டத்தில், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இருந்து, திண்டுக்கல், கமலாபுரம் வரையில், 131.96 கி.மீ.,க்கு, அமைக்கப்படுகிறது. இந்த ரோடு அமைக்க, பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட, 10 கிராமங்களில், 259 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. 10,095 தென்னைகள் உட்பட, 11,936 மரங்கள், நுாற்றுக்கணக்கான வீடுகள், தொழிற்சாலைகள், கட்டடங்கள் அகற்றப்பட உள்ளன. ரோடு பணி துவங்க கடந்த மார்ச் மாதம் பொள்ளாச்சி ஆச்சிபட்டி அருகே பூமி பூஜையுடன் துவங்கியது.

ஆனால், கையகப்படுத்தப்படும் நிலம் மற்றும் சொத்துகளின் உரிமையாளர்களுக்கு, இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.இழப்பீட்டு தொகை குறித்து அதிகாரிகள் வெளிப்படை தன்மையின்றி நடந்து கொள்வதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் எழுப்பி வருகின்றனர். இழப்பீட்டு தொகை குறித்து ஆவணப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என மனு அளித்தனர். அதற்கு வருவாய் துறை நிலம் எடுப்பு பிரிவில் இருந்து பதில் வராத நிலையில், தங்கள் நிலத்துக்குள் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்துவதாக நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலருக்கு மனு அளித்துள்ளனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:நிலம் எடுப்புக்கு வழங்கப்படும் இழப்பீடு சந்தை மதிப்பில் இருக்க வேண்டும்; அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதற்கு, அதிகாரபூர்வமான அரசாணையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஒப்பந்தாரர்கள் என கூறிக் கொண்டு சிலர் எவ்வித ஆவணங்களும் இன்றி நிலத்துக்குள் அத்துமீறி பிரவேசிக்கின்றனர்; மிரட்டுகின்றனர்.இதனால், பெண்கள், குழந்தைகளுக்கு சொந்த இடத்திலேயே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளே பொறுப்பாவார்கள்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X