பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காய விதை விலை அதிகரிப்பு

Added : நவ 27, 2019
Advertisement
சின்ன வெங்காய விதை விலை அதிகரிப்பு

திண்டுக்கல், திண்டுக்கல்லில் சின்ன வெங்காய விதை கிலோ ரூ.250க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திண்டுக்கல், நத்தம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, வேடசந்துார், பழநியில் ஆயிரத்து 200 எக்டேரில் சின்ன வெங்காயம் சாகுபடியாகிறது. இங்கிருந்து பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது எதிர்ப்பார்த்த வரத்து இல்லாததால் சின்ன வெங்காயம் விலை தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.60 க்கு விற்ற சின்ன வெங்காயம் நேற்று ரூ.25 அதிகரித்து ரூ.85 க்கு விற்றது.சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் வெங்காய நடவில் ஆர்வம் காட்டுகின்றனர். சின்ன வெங்காய விதையும் பல மடங்கு விலை அதிகரித்து வருகிறது.சென்ற வாரம் கிலோ ரூ.150 க்கு விற்ற விதை வெங்காயம், நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.250க்கு விற்றது. விதையை விட, வெங்காயம் குறைவான விலைக்கே விற்கிறது. சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஆகும் செலவு அதிகமென்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X