பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பேடு காப்புக்காட்டில் மரக்கன்று நட எதிர்பார்ப்பு

Added : நவ 27, 2019
Advertisement
 புதுப்பேடு காப்புக்காட்டில் மரக்கன்று நட எதிர்பார்ப்பு

ஸ்ரீபெரும்புதுார்:செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின், மேற்புற பகுதியான புதுப்பேடு காப்புக்காட்டில், மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் அடுத்த புதுப்பேடு பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் வனசரக கட்டுப்பாட்டில், காப்புக்காடு உள்ளது. இந்த காட்டை ஒட்டி, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புற பகுதியான இங்கு, நீர் தேங்காத, மேடான காலி நிலங்கள் ஏராளமாக உள்ளன.இந்த இடங்களில் பனை, நாவல், காட்டுவகை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செம்பரம்பாக்கம் ஏரிக்கு இரை தேடி, ஏராளமான பறவைகள் வருகின்றன. ஏரியின் மேற்புற பகுதியில் உள்ள புதுப்பேடு காப்புக்காட்டில், உயரமான மரங்கள் குறைவு. எனவே, இந்த காப்புகாட்டிலும், ஏரியின் மேற்புற பகுதியில் நீர்தேங்காத காலி நிலங்களிலும் உயரமாக வளரக்கூடிய மரங்களை வளர்த்தால், பயனுள்ளாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X