தமிழ்நாடு

வேப்பூர், தொழுதூர் பகுதி கிராம மக்கள் ஏமாற்றம்! கள்ளக்குறிச்சியுடன் இணைக்காததால் விரக்தி

Added : நவ 27, 2019
Advertisement
வேப்பூர், தொழுதூர் பகுதி கிராம மக்கள்  ஏமாற்றம்! கள்ளக்குறிச்சியுடன் இணைக்காததால் விரக்தி

வேப்பூர்: வேப்பூர், தொழுதுார் பகுதியை கள்ளக்குறிச்சியுடன் இணைக்கவும், புதிய மாவட்டத்துடன் இணைத்தால் பின் தங்கிய கிராமங்கள் வளர்ச்சி பெறும் என எதிர்பார்த்த கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடலுார் மாவட்டத்தின் கடைகோடி பகுதியாக வேப்பூர் தாலுகாவின் 53 வருவாய் கிராமங்களும், திட்டக்குடி தாலுகாவின் 50 கிராமங்களும் உள்ளது. இப்பகுதியிலிருந்து கடலுார் கலெக்டர் அலுவலகம் செல்ல 110 கி.மீ., துாரம், 3 முதல் 4 மணி நேரம் வரை பயணிக்க வேண்டும்.இதனால், விவசாயிகள் தங்களின் தேவைகளை அரசுக்கு தெரிவிக்க முடியாமலும், கிராமங்கள் வளர்ச்சியில் பின் தங்கியும் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.பின் மாவட்ட எல்லைகள் பிரிப்பு தொடர்பாக கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் அப்பகுதி மக்கள் பங்கேற்று, வேப்பூர், தொழுதுார் பகுதிகள் வணிகம் மற்றும் வியாபாரத்திற்கு கள்ளக்குறிச்சியை சார்ந்துள்ளதாலும், எளிய போக்குவரத்து வசதி உள்ளதாலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்குமாறு மனு வழங்கினர்.

இதனை, உளுந்துார்பேட்டை குமரகுரு எம்.எல்.ஏ.,வும் பரிசீலனை செய்வதாக கூறினார். இதை விரும்பாத விருத்தாசலம் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., திட்டக்குடி கணேசன் எம்.எல்.ஏ., சமூக நல அமைப்புகள் சில, வேப்பூர், தொழுதுார் பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கூடாது என கலெக்டரிடம் மனு கொடுத்து முட்டுக்கட்டை போட்டனர்.அரசியல் வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தொடர் அழுத்தத்தால், வேப்பூர், தொழுதுார் பகுதியினர் வழங்கிய கோரிக்கைகளை வருவாய் துறையினர் கிடப்பில் போட்டனர்.இதற்கிடையே கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட எல்லைகள் உருவாக்கப்பட்டு, நேற்று முன்தினம் முதல் 34வது மாவட்டமாக முதல்வர் துவக்கி வைத்தார்.

இதில், விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்த சின்னசேலத்திற்கு, ரூ.1000 கோடியில் கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லுாரி, கள்ளக்குறிச்சியில் ரிங் சாலை, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்வு, ரிஷிவந்தியத்தில் அரசு கலைக் கல்லுாரி உட்பட பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.அதே சமயத்தில் அருகில் 30 கி.மீ., துாரத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணையும் என ஆவலுடன் காத்திருந்த வேப்பூர், தொழுதுார் சுற்றுப்புற கிராம மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.சமூக வலைதளங்களில் வைரலாகும் 'மீம்ஸ்'விருத்தாசலம் தலைமையிலான புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆளும்கட்சி தொகுதியாக இல்லாததால் உருவாக்க முடியவில்லை என அரசியல்வாதிகள் கூறினர்.

தற்போது, விருத்தாசலம் அ.தி.மு.க.,வின் தொகுதியாக இருந்தும் உருவாக்க முடியவில்லை. மாவட்ட உருவாக்கம் குறித்து எம்.எல்.ஏ., கலைச்செல்வன் சட்டசபையில் பேசிய போது, அமைச்சர் உருவாக்க முடியாது என கூறினார். இதையடுத்து விருத்தாசலம் எம்.எல்.ஏ.,வை கேலி செய்து 'மீம்ஸ்'கள் பேஸ்புக், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வரைலாக பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X