சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோண்டப்பட்ட ரோடுகளால் நெரிசல் தினமும் மக்கள் அதிருப்தி

Added : நவ 27, 2019
Advertisement
 தோண்டப்பட்ட ரோடுகளால் நெரிசல் தினமும் மக்கள் அதிருப்தி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள்; விதிமுறை மீறும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொள்ளாச்சி நகரில், திட்டமிடல் இல்லாமல், மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன.ஒரு ரோட்டில் குழி தோண்டி, குழாய் பதித்து முடிக்காமல், மற்றொரு பக்கம் குழி தோண்டப்படுகிறது. தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்காமல் அப்படியே மண் திட்டுக்களாக அலட்சியமாக விட்டுள்ளனர்.புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், நகரில் பல ரோடுகள், மண் மேடுகளாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மாறியுள்ளன.

சரியில்லாத ரோடுகளில் மாற்று வழித்தடத்தில் வாகனங்களை இயக்குவதால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.கோவை, பாலக்காடு, திருச்சூர், உடுமலை, வால்பாறை பல்லடம் வழித்தடத்தில் வரும் வாகனங்கள், பொள்ளாச்சி நகரத்தை கடக்க குறைந்த பட்சம், 20 நிமிடங்களாகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசாரும் சிரமப்படுகின்றனர். நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளாலும், விதிமுறை மீறும் வாகனங்களாலும் நெரிசல் ஏற்படுகிறது. நெரிசல் மிகுந்த நேரத்தில் சத்திரம் வீதி, கடைவீதி பகுதிகளில், சரக்கு வாகனங்கள் ரோட்டில் நிறுத்தி பொருட்களை இறக்குவதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.போஸ்ட் ஆபீஸ் அருகே சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நெரிசல் ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுங்கட்சி கலக்கம்!தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்காமல் உள்ளதுடன், பாதாள சாக்கடை திட்டப்பணியும் இழுபறியாக நடப்பதால் நரக வேதனையை அனுபவிக்கும் மக்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.பாதாள சாக்கடை திட்டப்பணிகளால், அதிருப்தியில் உள்ள மக்களிடம் உள்ளாட்சி தேர்தலின் போது ஓட்டு சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X