பொது செய்தி

தமிழ்நாடு

நெற்களம் வசதி இல்லை விவசாயிகள் பரிதாபம்

Added : நவ 27, 2019
Share
Advertisement
உத்திரமேரூர்:பட்டாங்குளம் கிராமத்தில் நெற்களம் இல்லாததால், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெற்கதிர்களை சாலையில் உலர வைக்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.உத்திரமேரூர் பேரூராட்சி, பட்டாங்குளம் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமத்தினர், அறுவடை செய்த நெற்கதிர், வேர்க்கடலையை உலர வைக்க, பட்டாங்குளத்தில் நெற்களம் இல்லை.இதனால், பட்டாங்குளம் - மல்லியங்கரணை
 நெற்களம் வசதி இல்லை விவசாயிகள் பரிதாபம்

உத்திரமேரூர்:பட்டாங்குளம் கிராமத்தில் நெற்களம் இல்லாததால், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெற்கதிர்களை சாலையில் உலர வைக்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.உத்திரமேரூர் பேரூராட்சி, பட்டாங்குளம் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமத்தினர், அறுவடை செய்த நெற்கதிர், வேர்க்கடலையை உலர வைக்க, பட்டாங்குளத்தில் நெற்களம் இல்லை.இதனால், பட்டாங்குளம் - மல்லியங்கரணை சாலையில், பயிர்களை உலர வைக்கின்றனர். குறுகலான சாலையில், நெற்கதிர், வேர்க்கடலை உள்ளிட்ட விளைபொருட்களை உலர வைப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்எனவே, பட்டாங்குளத்தில் நெற்களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X