பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் மாணவர்கள் பயிற்சி முகாம்

Added : நவ 27, 2019
Advertisement

நெல்லிக்குப்பம்: திட்டக்குடி அடுத்த ம.புடையூர் ஜெ.எஸ்.ஏ. வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் முகாம் துவக்க விழா நடந்தது.திருகண்டேஸ்வரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தேவநாதன் தலைமை தாங்கினார். மாணவர் குகன் வரவேற்றார்.உதவி வேளாண்மை இயக்குனர் பாலசுப்ரமணியன், உதவி விதை சான்று அலுவலர் தமிழ்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் பிரகாஷ், கல்லுாரி முதல்வர் தாணுநாதன், உதவி பேராசிரியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இயற்கை விவசாயத்தின் அவசியம் பற்றியும், இயந்திரங்கள் பயன்படுத்தும் முறைகள், நோய் தாக்குதலை கட்டுபடுத்தும் முறைகள் பற்றி விவசாயிகள் தங்கள் அனுபவங்களை விளக்கினர். பள்ளி வளாகத்தில் விழா நினைவாக மரக்கன்றுகள் நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X