பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்

Added : நவ 27, 2019
Advertisement

கடலுார்: நிரந்தர ஊதிய விகிதம் அமைத்திடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் கடலுாரில் உண்ணாவிரதம் நடந்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் அமைக்க வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, டாஸ்மாக் பணியாளர்கள், நியாய விலை கடை பணியாளர்கள், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை துப்புரவு பணியாளர்கள், துாய்மை காவலர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன் நடந்த உண்ணாவிரதத்திற்கு மாநில துணைத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.மாநில தலைவர் சிவக்குமார் சிற்பபுரையாற்றினார். முன்னாள் மாநில அமைப்பு செயலர் சீனுவாசன், முன்னாள் மாநில பொதுச்செயலர் குப்புசாமி, மாநில செயலர் சிவக்குமார், தஞ்சை மாவட்ட செயலர் கருணாநிதி, நாகை மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், திருவாரூர் மாவட்ட செயலர் குணசீலன், நிர்வாகிகள் ஞானஜோதி, குமார், ராமச்சந்திரன், பிரகாஷ், வெங்கடாசலம், வீரப்பன், கோவிந்தராசன், ஜெயகணேஷ், நெஞ்செழியன், கல்யாணசுந்தரம், சுந்தரமூர்த்தி, தேவேந்திரன், சேகர், மகேந்திரன், விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X