குறிச்சிக்கோட்டை- கொமரலிங்கம்ரோட்டை விரிவுபடுத்த கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறிச்சிக்கோட்டை- கொமரலிங்கம்ரோட்டை விரிவுபடுத்த கோரிக்கை

Added : நவ 27, 2019

உடுமலை : குறிச்சிக்கோட்டையிலிருந்து கொமரலிங்கம் செல்லும் ரோட்டை விரிவுபடுத்தி, விபத்துகளை குறைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை குறிச்சிக்கோட்டையிலிருந்து, கொமரலிங்கம் செல்லும் ரோடு, நெடுஞ்சாலைத் துறையால், மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் மூணாறு, மறையூர் உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், உடுமலை வராமல், குறிச்சிக்கோட்டை, கொமரலிங்கம், நெய்க்காரபட்டி வழியாக பழநிக்கு செல்ல இந்த வழித்தடம் பயன்படுகிறது. வழித்தடத்தில், 15க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.இந்த ரோட்டில், போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரோடு மேம்படுத்தப்படாமல் உள்ளது.

எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு, விலகிச்செல்ல முடியாத அளவுக்கு, பல இடங்களில், ரோடு குறுகலாக உள்ளது. இடைவழித்தடமாக உள்ள ரோட்டை, மேம்படுத்த வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதே போல், குறிச்சிக்கோட்டையை தாண்டியதும், பி.ஏ.பி., வாய்க்கால் அருகே, அபாய வளைவு உள்ளது. குருவப்பநாயக்கனுார் கிராமம் அருகில், அமைந்துள்ள வளைவிலும், வாகனங்கள் விலகிச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வாக, குறிச்சிக் கோட்டை யிலிருந்து, கொமரலிங்கம் வரை இந்த ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்.

மேம்படுத்தினால், பழநிக்கு மாற்றுப்பாதையாகவும், அமையும் வாய்ப்புள்ளது.இந்த வழியாக திருமூர்த்திமலை, அமராவதி அணை க்கு செல்லும், பயணிகளும் பயனடைவர். மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X