சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்திய குடியரசு கட்சி மறியல்

Added : நவ 27, 2019
Advertisement

மங்கலம்பேட்டை; மங்கலம்பேட்டையில் காங்., மாநில தலைவரை கண்டித்து, இந்திய குடியரசு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உள்ளாட்சித் தேர்தலில், மேயர் உள்ளிட்ட பதவிக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு தான், தேர்தலை நடத்த வேண்டுமென இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.இந்த வழக்கை அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் துாண்டுதலில் தொடர்ந்ததாக, காங்., தலைவர் அழகிரி விமர்சனம் செய்தார். இதனால், காங்., தலைவரைக் கண்டித்து, மங்கலம்பேட்டையில் இந்திய குடியரசு கட்சியினர், மாநில கொள்கை பரப்புச் செயலர் மங்கப்பிள்ளை தலைமையில், நேற்று மாலை 4:00 மணியளவில் விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X