பொது செய்தி

தமிழ்நாடு

கேலோ விளையாட்டு போட்டி

Added : நவ 27, 2019
Advertisement

சிதம்பரம்: புவனேஸ்வரில் நடக்கவுள்ள கேலோ விளையாட்டுப் போட்டிக்கு டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினராக அண்ணாமலை பல்கலைக் கழக உடற்கல்வித் துறை தலைவர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 2020ம் ஆண்டிற்கான கேலோ இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.கேலோ விளையாட்டுப் போட்டிகளுக்கு அமைக்கப்பட்ட குழுவில் டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உடற்கல்வித் துறை தலைவர் மற்றும் இயக்குனர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. டெக்னிக்கல் கமிட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் செல்வத்தை துணைவேந்தர் முனைவர் முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன் ஆகயோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X