கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக உள்துறை செயலர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

Added : நவ 27, 2019
Advertisement

சென்னை :நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி நான்கு வாரங்களுக்குள் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மத்திய சிறையில் ஆயுள் கைதியாக உள்ள தன் கணவர் சிராஜுதினை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கோவை குனிய முத்துாரை சேர்ந்த ஆசியா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.இதேபோல மேலும் பலரும் மனு செய்திருந்தனர். விசாரித்த உயர் நீதிமன்றம் சிராஜுதின் சக்திவேல் உள்ளிட்ட ஐந்து ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஜனவரியில் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.இதையடுத்து ஆசியா உட்பட ஐந்து மனுதாரர்களும் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்கா ராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அதிகாரிகளுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் உத்தரவை அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X