பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற ராட்சத குழாய் புதைப்பு

Added : நவ 27, 2019
Advertisement

கடலுார்: கடலுார் நகரில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற நகராட்சி சார்பில் ராட்சத குழாய் புதைக்கும் பணி நடந்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை கடலுார் நகரில் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது. மழையின் காரணமாக திருப்பாதிரிப்புலியூர், முருகா நகர், சரவணா நகர், குமரன், சவுடாம்பிகை நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது.நகர் பகுதிகளில் வடிகாலாக உள்ள சின்ன வாய்காலில் மீண்டும் அக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளதால் மழை நீர் வடிவதற்கு வழியில்லாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் மிகுந்த சிரமம் அடைந்தன.இதையடுத்து, கடலுார் நகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் இளைநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சரவணா நகர் இணைப்பு சாலையில் ராட்சத குழாய் புதைத்து தேங்கி நிற்கும் மழை நீரை சின்ன வாய்காலில் வடிய வைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.கல்வெர்ட்டுகள் ஆக்கிரமிப்பு திருவந்திபுரத்தில் இருந்து வரும் சின்னவாய்க்கால் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பாசன வாய்க்காலாக இருந்தது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பு காரணமாக பாசன வாய்கால் வடிகாலாக மாறியது. ஆக்கிரமிப்பால், நகரில் தேங்கியுள்ள மழை நீர் வடிய வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் நகரில் பல இடங்களில் தண்ணீர் வடிவதற்காக அமைக்கப்பட்டிருந்த கல்வெர்ட் பாலங்கள், சிறு வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால், துார்ந்து காணப்படுகின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X