சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது

Added : நவ 27, 2019
Share
Advertisement
பண்ருட்டி: பண்ருட்டி அருகே வீடு புகுந்து நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த பூண்டி ஊராட்சி, கட்டமுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி, 32. இவரது மனைவி ஷீலா. வீரமணி புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.கடந்த 25ம் தேதி காலை வீரமணி வேலைக்கு சென்றநிலையில், அவரது மனைவி ஷீலா காலை 10:00 மணிக்கு வெளியே சென்றுவிட்டு, மதியம் 1:30

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வீடு புகுந்து நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த பூண்டி ஊராட்சி, கட்டமுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி, 32. இவரது மனைவி ஷீலா. வீரமணி புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.கடந்த 25ம் தேதி காலை வீரமணி வேலைக்கு சென்றநிலையில், அவரது மனைவி ஷீலா காலை 10:00 மணிக்கு வெளியே சென்றுவிட்டு, மதியம் 1:30 மணிக்கு வீடு திரும்பினார்.அப்போது பீரோ சாவி வைத்திருந்த இடம் மாறி இருந்ததால், சந்தேகமடைந்த ஷீலா பீரோவை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த ஆறரை சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1.50 லட்சம்.இது குறித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி, சப் இனஸ்பெக்டர் தீபன் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கட்டமுத்துப்பாளையம் மேட்டு தெருவை சேர்ந்த பழனியின் மனைவி உமா, 40, ஷீலா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரிடம் ஷீலா வெளியே செல்வதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில், உமா வீட்டில் உள்ள படிக்கட்டின் கீழ் மறைந்து கொண்டு உட்கார்ந்திருந்துள்ளார். அவர் வெளியே சென்று விட்டார் என நினைத்த ஷீலா வீட்டை பூட்டி விட்டு, விசேஷத்திற்கு சென்றுள்ளார்.பின், உமா பீரோ சாவியை எடுத்து நகைகளை திருடிக் கொண்டு, பின் பக்க கதவை திறந்து வெளியே தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து உமாவை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த அறரை சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X